தொழில்நுட்பச் செய்திகள்
சத்யா நாதெல்லா

இரவு நேரத்தில் வேலை செய்யாதீர்கள்- எச்சரிக்கும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ

Published On 2022-04-08 08:19 GMT   |   Update On 2022-04-08 08:19 GMT
பெருந்தொற்று காலத்தில் நாம் பணி செய்யும் நேரம் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேலும் சிலர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் அலுவலகங்கள், வீட்டில் இருந்தே பணி செய்யும் வொர்க் ஃபிரம் ஹோம் உள்ளிட்ட அம்சங்களை அறிமுகம் செய்தன. 

ஆனால் இந்த வொர்க் ஃபிரம் ஹோம் பணிகளை தவறாக கையாண்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வொர்க்ஃபிரம் ஹோம் எத்தகைய பாதிப்பை தனது அலுவலர்களிடம் உருவாக்கியது என்ற ஆய்வை செய்தது. அதில் ஊழியர்கள் அனைவரும் மாலை நேரத்திற்கு பின் வேலை பார்த்தது தெரியவந்தது.

ஊழியர்களின் உற்பத்தி திறன் மதிய உணவுக்கு முன்பும், அதற்கு பின்பும் அதிகரித்துள்ளது. அதைத்தவிர மாலை நேரத்திலும் பொதுவாக ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஹொர்க்பிரம் ஹோம் நமது பணிக்கும், வீட்டினருடன் நேரம் செலவிடுவதற்குமான எல்லையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மாற்றம் நல்லதல்ல என நாதெல்லா எச்சரித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் மேலாளர்கள் அனைவரும் சரியான எல்லையை வகுத்துகொள்ள வேண்டும். இரவு நேரத்தில் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும்படி யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதை வைத்தும், நமது வெளியீட்டு அளவீடுகளையும் மட்டுமே வைத்து உற்பத்தி திறனை அளக்கிறோம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பது என்பதும் உற்பத்தி திறனுக்கு முக்கியமானது.

பெருந்தொற்று காலத்தில் நாம் பணி செய்யும் நேரம் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேலும் சிலர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.

ஊழியர்கள் உடல் நலத்தை பாதுகாக்க இரவு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் இமெயில்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News