செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

எழும்பூர்-நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்பட 50 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

Published On 2021-06-16 02:42 GMT   |   Update On 2021-06-16 02:42 GMT
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06063) சிறப்பு ரெயில் 17-ந்தேதி மற்றும் 24-ந்தேதியும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) சிறப்பு ரெயில் 18-ந்தேதி மற்றும் 25-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:

பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் 50 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.  இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்- திருச்சி (வண்டி எண்: 02653) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும், திருச்சி-எழும்பூர் (02654) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஈரோடு (02649) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும், ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02650) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-கோவை (02667) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும், கோவை-நாகர்கோவில் (02668) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரத்துசெய்யப்படுகிறது. மேலும், எழும்பூர்-கொல்லம் (06101) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், கொல்லம்-எழும்பூர் (06102) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06063) சிறப்பு ரெயில் 17-ந்தேதி மற்றும் 24-ந்தேதியும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) சிறப்பு ரெயில் 18-ந்தேதி மற்றும் 25-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் (06065) சிறப்பு ரெயில் வருகிற 16, 20, 21, 23, 27, 28, 30-ந்தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) சிறப்பு ரெயில் 17, 21, 22, 24, 28, 29-ந்தேதி மற்றும் 1-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-மதுரை (06157) சிறப்பு ரெயில் 18, 20, 25, 27-ந்தேதிகளிலும், மதுரை-எழும்பூர் (06158) சிறப்பு ரெயில் 17, 19, 24, 26-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஐதராபாத் (02603) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக ஐதராபாத்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02604) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-மதுரை (06019) சிறப்பு ரெயில் 16, 18, 21, 23, 25, 28, 30-ந் தேதிகளிலும், மதுரை-எம்.ஜி.ஆர் சென்டிரல் (06020) சிறப்பு ரெயில் 17, 20, 22, 24, 27, 29-ந்தேதி மற்றும் ஜூலை 1-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-தஞ்சாவூர் (06865) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், தஞ்சாவூர்-எழும்பூர் (06866) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், மேட்டுப்பாளையம்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02672) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்தாகிறது. எழும்பூர்-மன்னார்குடி (06179) ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை, மன்னார்குடி-எழும்பூர் (06180) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

கோவை-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02682) சிறப்பு ரெயில் 18 மற்றும் 25-ந்தேதிகளிலும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை (02681) சிறப்பு ரெயில் 19 மற்றும் 26-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-ராமேசுவரம் (06851) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், ராமேசுவரம்-எழும்பூர் (06852) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்தாகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் (06191) சிறப்பு ரெயில் 16-ந்தேதி 30-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06192) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02640) 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஆலப்புழா (02639) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (02695) சிறப்பு ரெயில் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02696) சிறப்பு 17-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02698) சிறப்பு ரெயில் 19 மற்றும் 26-ந்தேதிகளிலும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (02697) சிறப்பு ரெயில் 20-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இவைகளுடன் சேர்த்து மொத்தம் 50 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News