செய்திகள்
அஸ்வின் - டிம் பெயின் வாக்குவாதம்

’இந்தியாவுக்கு வாங்க... அதுதான் உங்கள் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ - டிம் பெயினுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

Published On 2021-01-11 12:15 GMT   |   Update On 2021-01-11 12:15 GMT
’இந்தியாவுக்கு வாங்க... அதுதான் உங்கள் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு அவரது ஆக்ரோஷமான மொழியிலேயே இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
சிட்னி:

சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட முடிவில் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

போட்டியின் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களேயே ரஹானே வெளியேறினார். அதன்பின் புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களை பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி விரைந்தது. ஆனால் ரிஷப் பண்ட் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஹனுமா விஹாரி களமிறங்கினார். புஜாராவும், விஹாரியும் இணைந்து இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 77 ரன் எடுத்த நிலையில் புஜாராவும் வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், அடுத்து களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின் , விஹாரியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்கவிடாமல் தடுத்தது. இரு வீரர்களுமே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவரின் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் போட்டி டிராவில் முடிந்தது. சிறப்பான ஆடிய விஹாரி 161 பந்தில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரு அணிகளும் விளையாடும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவின்ஸ்லேண்டில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த மைதானத்திற்கு காபா என்ற புனைப்பெயர் உள்ளது.

இதற்கிடையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களே வேண்டுமேன்ற வம்புக்கு இழுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்றைய 5-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன்\விக்கெட் கீப்பர் டிம் பெயின் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் அஸ்வினை கிண்டல் அடிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். டிம் பெயினின் கருத்துக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்தார்.  

டிம் பெயின் கூறுகையில்,  ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.

டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் (டிம்ப் பெயின்) கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்றார்.

இரு வீரர்களின் இந்த காரசாரமான விவாதம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 'Come To India' (இந்தியாவுக்கு வாருங்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.


Tags:    

Similar News