செய்திகள்
தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3638

Published On 2019-10-11 05:40 GMT   |   Update On 2019-10-11 06:06 GMT
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை:

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.

இந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை 29 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லை.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 360 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் 3670 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.29,104 என்ற அளவில் விற்பனை ஆனது. கிராமுக்கு 32 ரூபாய்  குறைந்து, ஒரு கிராம் ரூ.3638-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சரவன் 30  ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3795 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு 900 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.49 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
Tags:    

Similar News