செய்திகள்
கோப்புப்படம்

மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கருப்பு சட்டை அணிந்து மாணவர்கள் போராட்டம்

Published On 2021-11-13 10:15 GMT   |   Update On 2021-11-13 10:15 GMT
மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு நீதி வேண்டும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து கொண்டு மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இதேபோல் கோட்டைமேடு, பெருமாள் கோவில் பகுதியில் மாணவியின் வீட்டின் முன்பு 200-க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News