செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மண்டல போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 1,837 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-22 18:00 GMT   |   Update On 2021-04-22 18:00 GMT
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. துறைவாரியாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் 2,320 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் 1,837 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம் மூலம் ஓரிருநாளில் தடுப்பூசி போடப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News