ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-09-27 06:21 GMT   |   Update On 2021-09-27 06:21 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை முறையாக கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகை மூலம் வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் கோவில் வெளிப் பிரகாரத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரிதிரு விழாவையொட்டி நடத்தப்படும் பரிவேட்டை ஊர்வலத்தை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டு மின்றி பரிவேட்டை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப் பிரகாரங்களை சுத்தமாக பராமரித்து தேவையான மின் விளக்குகள் அமைத்து இருளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை முறையாக கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகை மூலம் வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேற்கண்ட தீர்மா னங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பக்தர்கள் சங்கதுணை செயலாளர் ராஜ், துணைத் தலைவர் எம்.வி. நாதன், சட்ட ஆலோசகர் எஸ்.பி. அசோகன் மற்றும் நிர்வாகிகள் மோகன், திரவி யம், வீரன், சிவா, மணிகண்ட லிங்க ராஜன், பெருமாள், பகவதி அம்மாள், ஜெனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News