வழிபாடு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம்

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-12-13 07:53 GMT   |   Update On 2021-12-13 07:53 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
குமரி மாவட்டத்தில் மகா சிவாலய ஓட்டம் நடக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமாக திக்குறிச்சி மகாதேவர் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்று மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடியை தரணநல்லூர் துணை தந்திரி வேணுகோபால் ஏற்றிவைத்தார்.

கோவில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் விழா நாட்களில் தினமும் கணபதிஹோமம், கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 20-ந் தேதி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, 21-ந்தேதி தாமிரபரணி படித்துறையில் ஆராட்டு ஆகியவை நடக்கிறது.

Tags:    

Similar News