செய்திகள்
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹியுபெர்ட்

ரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை

Published On 2019-08-17 09:24 GMT   |   Update On 2019-08-17 09:24 GMT
அமெரிக்கா-ரஷ்யா உறவு மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரான்ஸ்-ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது அவசியம் என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹியுபெர்ட் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:

ரஷ்யாவுடனான நட்புறவு குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹியுபெர்ட் வெட்ரின் பேட்டி அளித்தார்.   அப்போது, ரஷ்யா உடனான நட்புறவை நாம் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். 

“ஒருவேளை டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஐரோப்பிய நாடுகளின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ரஷ்யா உடனான உறவை பலப்படுத்த உத்வேகம் காண்பிப்பார். எனவே, அமெரிக்கா-ரஷ்யா உறவு மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரான்ஸ்-ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.

பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி , மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் ரஷ்யா-பிரான்ஸ் கூட்டுறவு முக்கியமாகும். மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும்” என்று ஹியூபெர்ட் கூறினார்.

ஒருநாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் கூறியிருந்தார். ஆகஸ்ட் 24 முதல் 26 தேதி வரை நடைபெற உள்ள ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, ரஷ்யா அதிபர் புதினுடன் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஹியுபெர்ட் தெரிவித்தார்.

புதின் மற்றும் மேக்ரான் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையேயான நல்லுறவு, உக்ரைன் விவகாரம், சிரியா, லிபியா உள்நாட்டு போர்கள் மற்றும் ஈரான் அணு ஒப்பந்தம் போன்ற முக்கிய விடயங்கள் பற்றி விவாதிக்கப்படும் என ரஷ்ய அதிபரின் அலுவலகமான கிரெம்லின் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News