செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

Published On 2021-08-25 09:01 GMT   |   Update On 2021-08-25 09:01 GMT
பயிற்சி மூலம் வரும் காலங்களில் ஆசிரியர் விடுப்பு எடுக்கும்பட்சத்திலும் மாற்று ஆசிரியரை கொண்டு வகுப்பை கையாள முடியும்.
திருப்பூர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 158 அரசு பள்ளிகளை சேர்ந்த முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி திறன் வளர் பயிற்சி இணையதளம் வழியாக தொடங்கியது. வருகிற 27-ந் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது. 

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில்:

ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துதல், எமிஸ், ‘ஹை-டெக்‘ ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.பயிற்சி மூலம் வரும் காலங்களில் ஆசிரியர் விடுப்பு எடுக்கும்பட்சத்திலும் மாற்று ஆசிரியரை கொண்டு வகுப்பை கையாள முடியும் என்றார்.
Tags:    

Similar News