செய்திகள்
கோப்புபடம்

பொதுமக்கள் பங்களிப்புடன் ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு

Published On 2021-11-27 07:41 GMT   |   Update On 2021-11-27 07:41 GMT
வாகன போக்குவரத்து அதிகமுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
திருப்பூர்:
 
வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கான விசாரணையில் ‘சி.சி.டி.வி.’ கேமரா பதிவுகள் போலீசாருக்கு மிகவும் உதவியாக உள்ளன. தன்னார்வலர், பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே பொது இடங்களில் சி.சி.டி.வி. பொருத்தப்படுகின்றன. இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் இவ்வசதி மிகவும் குறைந்த அளவு மட்டுமே உள்ளது. 

திருப்பூர், பல்லடம், வேலம்பாளையம், மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் செல்லும் நால்ரோடு சந்திப்பு உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்தபடி நடமாடியது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் நால்ரோடு பகுதியில் ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News