செய்திகள்
ராகுல் காந்தி

மாணவர்கள் விஷயத்தில் கண்மூடித்தனமாக இருப்பதா?- ராகுல் காந்தி காட்டம்

Published On 2021-09-07 06:40 GMT   |   Update On 2021-09-07 07:13 GMT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வை எழுதுவதற்காக 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். தற்போது கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தேர்வை தள்ளி வைக்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்கள். இதனால் வருகிற 12-ந்தேதி நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்க இருக்கிறது.



இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. கொரோனா நோய் தொற்று இருக்கின்ற இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது சரியானது அல்ல. அரசு ஏற்பாடு செய்துள்ள நடவடிக்கைகளில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனாலும் சூழ்நிலையை கருதி நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். இப்போது தேர்வு நடத்துவது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை’’ என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News