லைஃப்ஸ்டைல்
சாமை மிளகு பொங்கல்

சாமை மிளகு பொங்கல்

Published On 2020-01-13 04:34 GMT   |   Update On 2020-01-13 04:34 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - அரை கிலோ
பாசிப் பருப்பு - 200 கிராம்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
பெருங்காய தூள் - சிறிதளவு
நெய், உப்பு - தேவைக்கு



செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியையும், பாசிப்பருப்பையும் நீரில் நன்றாக கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், மிளகு, இஞ்சியை கொட்டி வறுத்தெடுக்கவும்.

பின்னர் அதனுடன் வேகவைத்த சாமை சாதம், பெருங்காயதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

ருசியான சாமை மிளகு பொங்கல் தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News