ஆன்மிகம்
கலச பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

பாலாலய பூஜை நிறைவு: பழனி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

Published On 2019-12-03 06:36 GMT   |   Update On 2019-12-03 06:36 GMT
பழனி முருகன் கோவிலில் பாலாலய பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.6½ கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின.
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பாலாலய பூஜை கடந்த 3 நாட்கள் நடந்தது. கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்ற பூஜையில், 3-ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால யாகபூஜை தொடங்கியது. 7.25 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை, கோ பூஜை நடந்தது.

பின்னர் மண்டபத்தில் கலசபூஜை நடைபெற்று கலச புறப்பாடு நடந்தது. அப்போது கலசமானது கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு பாலாலய பிரவேசம், கலாகர்‌‌ஷண பூஜை நடைபெற்று சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நைவேத்தியம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தொடங்கின.
Tags:    

Similar News