செய்திகள்
தீ

கொடுமுடி அருகே நார்மில்லில் திடீர் தீ விபத்து

Published On 2021-05-10 12:26 GMT   |   Update On 2021-05-10 12:26 GMT
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக நார் இருந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் கரும்புகையுடன் கூடிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.
கொடுமுடி:

கொடுமுடி அருகே வெற்றிக்கோனார் பாளையத்தில் தேங்காய் நார்மில் உள்ளது. இதன் உரிமையாளர் கம்மங்காட்டு களத்தை சேர்ந்த சோமசுந்தரம் (64) ஆவார். இவரது நார் மில்லினை காங்கயம் அருகே ஆலாம்பாடியை சேர்ந்த செந்தில் (35) என்பவர் கடந்த 2 வருடங்களாக லீசுக்கு ஓட்டி வருகிறார். இந்த மில்லில் வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்த 7 பேர் உள்பட 15 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதியம் சுமார் 1.30 மணியளவில் நார்மில்லினை ஒட்டி உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். திடீரென நார்மில்லில் நார் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக நார் இருந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் கரும்புகையுடன் கூடிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. புகையை பார்த்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

மேலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 2 தீயணைப்புத் துறை வீரர்களும் 6 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர். 

Tags:    

Similar News