ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-11-08 09:03 GMT   |   Update On 2020-11-08 09:03 GMT
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படாத நிலையில் கந்தசஷ்டி விழா நடத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். 7 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து சூரம்சம்ஹாரம் நிகழ்ச்சியை கண்டு, அதன் பிறகு திருக்கல்யாணத்துடன் விரதத்தை நிறைவு செய்வார்கள். அதன்படி இந்த வருடம் வருகிற 15-ந்தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டாலும் திருவிழாக்கள் நடத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒருசில கோவில்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனியில் சூரம்சம்ஹாரம் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்படி, போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா மற்றும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று சாமி ஊர்வலம் செல்லும் ரதவீதி முதல் அடிவாரம் கிரிவீதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனியில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற வாய்ப்பு உள்ளது. சூரம்சம்ஹாரத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை கடைபிடித்து விழாவை நடத்த நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படாத நிலையில் கந்தசஷ்டி விழா நடத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.
Tags:    

Similar News