செய்திகள்
அமைச்சரவை கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்

Published On 2021-05-09 06:42 GMT   |   Update On 2021-05-09 07:57 GMT
கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை மறுநாள் சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முதல் நாளில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும், அடுத்த நாளில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்களும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 



தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில், நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News