செய்திகள்
உடன்குடி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கரும்பு, மஞ்சள் குலை குவியலை காணலாம்

உடன்குடியில் களைகட்டிய பொங்கல் சந்தை

Published On 2021-01-12 07:37 GMT   |   Update On 2021-01-12 07:37 GMT
உடன்குடியில் நடைபெற்ற பொங்கல் சந்தையில், கரும்பு, மஞ்சள், வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
உடன்குடி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று உடன்குடியில் பொங்கல் சந்தை நடைபெற்றது. சந்தை நடைபெற்ற பஜார் வீதிகளில் அதிகாலை முதல் கரும்பு, மஞ்சள், வாழைதார்கள், பனங்கிழங்கு போன்றவை பஜார் வீதிகளில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதைப்போல பொங்கல் பானை, குத்துவிளக்கு உட்பட ஏராளமான பொங்கல் பாத்திர பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சந்தையில் குவிந்து பொங்கல் பொருட்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு, சதோதரிகள், திருமணமான மகள்களுக்கு சீர் கொடுக்கும் பொதுமக்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக பஜாரில் குவிந்து பொங்கல் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் சந்தை களைகட்டி இருந்தது. உடன்குடி பகுதியில் காலையிலிருந்து இரவு வரை வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு கடந்து செல்ல வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Tags:    

Similar News