செய்திகள்

3 நாள் பரோல் முடிந்து சிறை திரும்பினார் லாலு - விரைவில் ஜாமினில் வெளிவருவார்

Published On 2018-05-14 13:13 GMT   |   Update On 2018-05-14 13:13 GMT
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 3 நாட்கள் பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்பினார். #LaluPrasadYadav
ராஞ்சி:

பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 

முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டு தண்டனையும் லாலுவுக்கு வழங்கப்பட்டது. 

ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக 5 நாள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 3 நாள் பரோல் மட்டுமே கிடைத்திருந்தது.

இந்நிலையில், மகனின் திருமணத்தில் பங்கேற்ற லாலு பிரசாத், தனது பரோல் முடிந்து இன்று ராஞ்சி சிறைக்கு திரும்பினார். முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த லாலுவுக்கு, 6 வார காலம் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே ஜாமீனுக்கான நடைமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் 6 வார கால ஜாமினில் லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பவுள்ளார். #LaluPrasadYadav
Tags:    

Similar News