லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பக்கமாக படுத்தால் நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்கள் இப்படி படுத்தால் நல்லது

Published On 2021-03-09 07:34 GMT   |   Update On 2021-03-09 07:34 GMT
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இந்த பக்கமாக படுத்தால் கருவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வதுண்டு. இன்பமான கால கட்டம் என்றாலும் அதிகப்படியான உபாதையால் அவை மன அழுத்தம் வரை கொண்டு சென்றுவிடும் என்பதால் தான் உணவு முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்கக் கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு பிறகு உறங்க செல்லலாம்.

பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும், வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

இடதுபக்கத்திலிருந்து அவ்வப்போது ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வலது புறம் படுக்கலாம். ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் இடது பக்கம் தூங்குவதே நல்லது.
Tags:    

Similar News