தொழில்நுட்பம்
சியோமி

மூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட்களை உருவாக்கும் சியோமி

Published On 2021-05-05 10:48 GMT   |   Update On 2021-05-05 10:48 GMT
சியோமி நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த டேப்லெட் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


புதிய எம்ஐ பேட் டேப்லெட் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் சமீபத்தில் அறிவித்தார். இதே தகவலை சியோமி நிறுவன இயக்குனர் வாங் டெங் தாமஸ் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சியோமி நிறுவனம் மூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல்கள் நபு, எனுமா மற்றும் எலிஷன் எனும் குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல்கள் MIUI12.5 சிஸ்டம் செயலிகளில் இடம்பெற்று இருக்கின்றன.



சியோமி உயர் ரக டேப்லெட் மாடல்கள் 4ஜி எல்இடி, 5ஜி வசதி, 2560x1600 பிக்சல் WQXGA டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் 10.97 இன்ச் பேனல் கொண்ட மாடல் 8720 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மூன்று மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் எனுமா மற்றும் எலிஷ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865, 865 பிளஸ் அல்லது 870 பிராசஸர் வழங்கப்படலாம். நபு மாடலில் ஸ்னாப்டிராகன் 855, 855 பிளஸ் அல்லது 860 பிராசஸர் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News