தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ பேட்

3 வேரியண்டுகளில் அறிமுகமாகியுள்ள ஒப்போ பேட்

Published On 2022-02-25 04:57 GMT   |   Update On 2022-02-25 04:57 GMT
மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட்டிற்கு ‘ஒப்போ பேட்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த ஒப்போ பேட் 11 இன்ச் அளவில் 2560x1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ளது. இந்த பேட் HDR 10 மற்றும் 10 பிட் கலர் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். 

இந்த ஒப்போ பேட் பிக்பக்கம் ஃப்ராஸ்டெட் பேக்குடனும், மெட்டல் சேசிஸுடனும் வந்துள்ளது. கலர் ஓ.எஸ்ஸை அடிப்படையாக கொண்டு ஆண்ட்ராய்டு 11-ல் இந்த டேப் இயங்கும். இந்த டேப் மேக்னட் மூலம் சார்ஜாகும் ஓப்போ பென்சிலையும் சப்போர்ட் செய்யும்.

மேலும் இதில் Snapdragon 870 chipset தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்ஸல் பின்புற கேமரா, 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 8,360mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த போன் கருப்பு மர்றும் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.27,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.38,800-ஆகவும், 6ஜிபி ரேம்+256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.32,300-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
Tags:    

Similar News