லைஃப்ஸ்டைல்
இஞ்சி கஷாயம்

இருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்

Published On 2020-12-21 05:20 GMT   |   Update On 2020-12-21 05:20 GMT
இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.

இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.

இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் ...நிச்சயம் பலன் அளிக்கும் .

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1 துண்டு
மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
வெல்லம் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப்

செய்முறை :

இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.

இதனுடன் பால் கலந்தும் குடிக்கலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News