உள்ளூர் செய்திகள்
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்துவர்கள்.

ஈஸ்டர் பண்டிகையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-04-17 08:08 GMT   |   Update On 2022-04-17 08:08 GMT
ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு:

ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளினை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்டர் பண்டியை முன்னிட்டு கடந்த மாதம் 2&ந் தேதி முதல் கிறிஸ்த வர்கள் 40 நாட்கள் தவக்காலம் (உபவாசம்) கடைபிடித்தனர்.

கடந்த 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், 14-ந் தேதி பெரிய வியாழனும், 15-ந் தேதி புனித வெள்ளியையொட்டி சிலுவை வழிபாடு நடந்தது.

இந்நிலையில் ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் ஈரோடு புனித அமல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஒளி வழிபாடும், திருமுழுக்கு (ஞானஸ்நானம்) புதுப்பித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

முன்னதாக ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர் தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்குதந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 

இதேபோல், சி.எஸ்.ஐ. தேவாலயம், ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும், பி.பெ.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்திலும், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயத்திலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி இன்று அதிகாலை வரை சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News