செய்திகள்
கோப்புபடம்

பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியின் குறுக்கே பாலம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-10-06 04:59 GMT   |   Update On 2021-10-06 04:59 GMT
மழைக் காலங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்வதற்காக பொதுமக்கள் 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகு மலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை நதி, தங்காய்புதூர் மற்றும் பெரியாரியபட்டி வழியாக சென்று ராமலிங்கபுரம் என்ற இடத்தில் நொய்யலில் கலக்கிறது. 

பெரியாரியபட்டி மற்றும் தங்காய்புதூரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்காக இந்த நதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்வதற்காக பொதுமக்கள் 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருந்தது.

மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை ஓட்டி செல்லும் விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக உப்புக்கரை நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.32 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்படுகிறது. பல ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News