ஆன்மிகம்
வழிபாடு

மறக்கக்கூடாத ‘காரங்கள்’

Published On 2020-08-27 07:09 GMT   |   Update On 2020-08-27 07:09 GMT
எந்த நேரமும் நாம் ஆகாரம் சாப்பிட மறப்பதில்லை. ஆனால் மற்ற காரங்கள் பலவும் நம் வாழ்வில் வருகின்றது. அந்தக் காரங்கள் என்னவென்று பார்ப்போம்.
எந்த நேரமும் நாம் ஆகாரம் சாப்பிட மறப்பதில்லை. ஆனால் மற்ற காரங்கள் பலவும் நம் வாழ்வில் வருகின்றது. அந்தக் காரங்கள் என்னவென்று பார்ப்போம்.

ஓம்காரம், பரிகாரம், பிரகாரம் என்ற மூன்று காரங்களை நாம் மறக்கக்கூடாது. ஆனால் நம் நினைவில் எப்போதும் உள்ள காரம், ஆகாரம். மனதில் உள்ள காரம், அகங்காரம். அது மட்டுமின்றி பிரகாரம் பற்றிச் சொல்லும் போது, எந்த தெய்வத்தை எத்தனை பிரகாரம் சுற்ற வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கணபதிக்கு ஒரு பிரகாரம், சூரியனுக்கு இரண்டு பிரகாரம், சிவனுக்கும், அம்பிகைக்கும் மூன்று பிரகாரம். விஷ்ணு, லட்சுமிக்கு நான்கு பிரகாரம். அரச மரத்திற்கு ஏழு பிரகாரம் வரவேண்டும். குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது. பிரகாரம் வரும் போது தெய்வ நாமாவளிகளைப் படிப்பதால் மன அமைதி கிடைக்கின்றது. நடப்பதால் உடல் ஆரோக்கியமாகின்றது.
Tags:    

Similar News