வழிபாடு
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கொரோனா பரவல் குறைவு எதிரொலி:ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-03-28 03:10 GMT   |   Update On 2022-03-28 03:10 GMT
ராமேசுவரம் கோவில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் கடந்த சில வாரங்களாகவே பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவிலில் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலை நம்பி வாழும் ரத வீதிகளை சுற்றி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News