தொழில்நுட்பம்
மீடியாடெக் பிராசஸர்

சியோமியின் சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்

Published On 2019-07-31 10:56 GMT   |   Update On 2019-07-31 10:56 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி90டி மற்றும் ஜி90 பிராசஸர்கள் அறிவிக்கப்பட்டதும், சியோமியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் புதிய ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்படும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. சியோமி துணை தலைவரும் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.



இந்திய கேமிங் துறையில் சுமார் 2.2 கோடி கேமர்கள் இருக்கின்றனர். சியோமி வெளியிட்ட தகவல்களில் பிளேயர்கள் தினமும் 42 நிமிடங்கள் கேமிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கேமிங் துறை 100 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் ஆக்டா-கோர் சி.பி.யு. கொண்டிருக்கிறது. இது ARM கார்டெக்ஸ்-A76 மற்றும் கார்டெக்ஸ்-A55 பவர் கோர்களை பயன்படுத்துகிறது. இத்துடன் 800 மெகாஹெர்ட்ஸ் மாலி G76 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. 10 ஜி.பி. LPDDR4 ரேம் வசதி கொண்ட முதல் மீடியாடெக் சிப்செட் ஆகும்.
Tags:    

Similar News