செய்திகள்
காதப்பாறை ஊராட்சி அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை படத்தில் காணலாம்.

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2021-01-11 18:06 GMT   |   Update On 2021-01-11 18:06 GMT
காதப்பாறை ஊராட்சி அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதாம்பாளையம்:

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி அலுவலகம் அருகே வெண்ணமலை செல்லும் சாலையில், தனியார் வங்கி எதிரே மின்மாற்றி உள்ளது. அதன் கீழே, மின்மாற்றி சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகள் வாரம் ஒரு முறை கூட அள்ளுவதில்லை. மேலும் வீட்டு குப்பைகளும், தனியார் வங்கியில் இருந்து கொட்டும் குப்பைகள் சாக்கு பையில் கட்டி இங்கு கொட்டப்படுகிறது. இதனால் அதிகளவில் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், சாக்குகள் குவிந்து கிடக்கின்றன.

தற்சமயம் இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் மழை தேங்கி உள்ளது. இதில், புழுக்கள்உற்பத்தியாகி இதன் மூலம் ஆயிரக்கணக்கில் கொசுக்கள் உருவாக வாய்பு உள்ளது. இதன் மூலம் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவ கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அள்ள வேண்டும். பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், பைகள், கவர்கள் இங்கு போடுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News