ஆன்மிகம்
திருச்சோபுரம் நாதர்கோவில் தேரோட்டம் நடந்த காட்சி.

திருச்சோபுரம் நாதர்கோவில் தேரோட்டம்

Published On 2021-03-27 03:52 GMT   |   Update On 2021-03-27 03:52 GMT
புதுச்சத்திரம் அருகே திருச்சோபுரம் நாதர்கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சத்திரம் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் ஸ்ரீ திருச்சோபுரம் நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருச்சோபுரம் நாதருக்கு காலை, மாலை இரு வேளையும் சிறப்பு பூஜைகள், ஆராதனை கள் நடைபெற்றது.

தொடர்ந்து காலை, மாலை இரு வேளையும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. கடந்த 22-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் , சாமிக்கு பல்வேறு பூஜைகளும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் திருச்சோபுரம் நாதர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திரண்டு நின்ற திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரில் சாமி ஆடி,அசைந்து வந்த கண்கொள்ளாக்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தேர் திருச்சோபுரம் கிராமத்தை சுற்றி மீ்ண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை கோவிலில் தீர்த்தவாரி உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News