ஆன்மிகம்
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களின் திருமண யோகம்

Published On 2019-11-06 05:20 GMT   |   Update On 2019-11-06 05:20 GMT
குருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம்.
குருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். இந்த அமைப்பு சற்று தாமதமான பலனை தந்தாலும் நிச்சயமாக ஆதாயத்தை தரும். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். திருமண விஷயத்தில் பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் ஏற்பாடுகளை இளம் பெண்கள் ஏற்பது நல்லது.

பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் இரும்பு மற்றும் ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். பொதுவாக பொருளாதார நிலை மாற்றத்தால் வரவிற்கு ஏற்ப செலவு இருக்கும். சுப செலவுகள் ஏராளமாக உண்டாகலாம். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம். பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட்ட பிறகு ஏழைகளுக்கு தானம் செய்தால் நல்லது நடக்கும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரிஉடனுறை ஸ்ரீதிருப்புலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங் கள். மேன் மேலும் வெற்றி பெறு வீர்கள். செல்வம் பெருகும். குருபார்வை காரணமாக தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குருவின் 7, 9-ம் இடத்தின் பார்வையால் பொருளாதாரம் மேம்படும். புதிய வீடு, வாகனங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.

ரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவரை வழிபடுவது மிக, மிக நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும். குறிப்பாக பரிக்கல்லில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது கூடுதல் பலன்களை பெற்றுதரும். பிரதோஷ நாட்களில் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.

பிரதோஷ நாட்களில் நந்தியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உடனுக்குடன் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். நேரம் கிடைக்கும் போது தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வாராகி அம்மனை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்ய வேண்டும். பைரவர்க்குரிய நெய்வேத்திய பொருட்களை படைத்து வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் நிச்சயம் நிறைவேறும்.

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்ட மத்தில் குருவின் ஆதிக்கம் நடக் கிறது. இதனால் குருபெயர்ச்சி தொடக்க நாட்களில் சற்று பண விரையம் ஏற்படலாம். ஆனால் வாரந்தோறும் வியாழக்கிழமை குரு வழிபாட்டை செய்து வந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். வியாழக்கிழமை விரதம், நந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பிரதோஷ வழிபாடு, பைரவர் வழிபாடு ஆகிய ஐந்தும்தான் ரிஷப ராசிகாரர்களுக்கு திருமண யோகத்தை பெற்றுத்தரும். குறிப்பாக கால பைரவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இரண்டும் முக்கியமாகும்.

சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் கால பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். காலபைரவரின் திருஉருவத்தில் பன் னிரண்டு ராசிகளும் அடங்கி உள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலாராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப்பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீன ராசியும் அமைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண் டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மரிக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

சனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழி படுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.

தருமபுரிக்கு அருகில் அமைந்து உள்ளது அதியமான் கோட்டை ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் ஆலயம். தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கும் அற்புதமான தலம். தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலை வில் உள்ளது. அதியமான்கோட்டை திருத்தலத்தில், பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபடுகிற வழக்கம் உண்டு. அதேபோல், பிரகாரத்தை எட்டு முறை வலம் வந்து வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

தேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு, 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. ரிஷப ராசிக்காரர்கள் இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் பலன் உண்டாகும்.

வைணவ தலத்தில் வழிபாடு செய்து குருபெயர்ச்சி மூலம் பலன் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம். 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாச ரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆல யத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலை வில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.
திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. குருபெயர்ச்சி பலன்களை அதிக சுபமாக பெற விரும்புபவர்கள் இந்த திருமஞ்சனத்தில் பங்கேற்று வழிபாடுகள் செய்து பலன் பெறலாம்.
Tags:    

Similar News