செய்திகள்
கோப்புப்படம்

ஜனாதிபதி, பிரதமருக்கு ர‌ஷிய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Published On 2020-12-31 23:29 GMT   |   Update On 2020-12-31 23:29 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

2021 புத்தாண்டு பிறந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ர‌ஷியா-இந்தியா இடையிலான தனித்துவமிக்க கூட்டுறவு நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறது. புத்தாண்டில் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News