ஆன்மிகம்
முத்துமாரியம்மன்

பு.சங்கேந்தியில் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2021-05-04 04:28 GMT   |   Update On 2021-05-04 04:28 GMT
பு.சங்கேந்தியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பு.சங்கேந்தி அய்யனார்புரம் கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.

நேற்று காலை 9 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

 இரவு 8 மணிக்கு அழகு முத்துமாரியம்மன் சிங்க வாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருளினார். இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாக பகுதியில் ஊராட்சி மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவினர்.
Tags:    

Similar News