செய்திகள்
சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் மனு அளித்த காட்சி.

சட்டவிரோதமாக லாரிகளில் கால்நடைகள் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்

Published On 2021-10-11 10:17 GMT   |   Update On 2021-10-11 10:17 GMT
மாவட்ட எல்லையில் எஸ்.பி.சி.ஏ. சோதனை சாவடி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

சட்டவிரோதமாக வாகனங்களில் கால்நடைகள் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கால்நடைகள் துன்புறுத்தப்பட்டு கடத்தி செல்வது குறித்து சிவசேனா கட்சி சார்பில் பலமுறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசியில்   தொடர்பு கொண்டு புகார் கூறி உள்ளோம். ஆனால் மேற்படி புகார்களுக்கு இதுவரையிலும் எந்தவித பலனும் இல்லை. 

நாட்டு மாடுகளை காப்பாற்றவும், பிற்கால சந்ததியினருக்கு பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும் விவசாயம் செழிப்பதற்காகவும் உடனடியாக தலையிட்டு திருப்பூர் மாவட்டத்தில் சொசைட்டி பார் தி பிரிவென்சன் ஆப் கர்லி டூ அனிமல்ஸ் கமிட்டி அமைக்க வேண்டும். 

ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை மூடிய நிலையில் கண்டெய்னர் லாரிகளிலும், திறந்தவெளி கனரக லாரிகளிலும் அடைத்து சித்ரவதை செய்து திருப்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்கின்றனர். 

இதனை தடுக்க மாவட்ட எல்லையில் எஸ்.பி.சி.ஏ. சோதனை சாவடி அமைக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது கால்நடைத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை , போக்குவரத்து துறைகளின் மூலம் நடவடிக்கை எடுத்து எஸ்.பி.சி.ஏ., மூலம் விலங்குகள் பாதுகாப்பகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News