செய்திகள்
ஆழ்துளை கிணறு

நீலகிரி மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு

Published On 2019-10-31 10:23 GMT   |   Update On 2019-10-31 10:23 GMT
நீலகிரி மாவட்டத்தில் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி:

திருச்சி, மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்தை அடுத்து, ‘மாவட்ட வாரியாக ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு நடத்தி பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்,’ என, அரசு உத்தரவிட்டது. நீலகிரியின் பல இடங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. அதில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வரவில்லை. அந்த இடங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறையாக மூடியுள்ளனரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், தற்போது, பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா கூறுகையில், ‘‘மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுத்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்

Tags:    

Similar News