செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2021-09-08 09:36 GMT   |   Update On 2021-09-08 09:36 GMT
ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அறந்தாங்கி:

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதனையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மாணவிக்கு வீட்டுத் தனிமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் மொத்தம் 326 பேர் படித்து வருகின்றனர். ஒரு அறைக்கு 20 நபர்கள் வீதம் 16 அறைகளில் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானதைய டுத்து 9-ம் வகுப்பிற்கு இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளித்தலைமை ஆசிரியர் காயத்திரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான மாணவி படித்த அறை மட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவிக்கு தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News