செய்திகள்
விவசாய சங்க தலைவர்கள்

6 அம்ச கோரிக்கைகளுக்கு பதில் தேவை- மத்திய அரசுக்கு கெடு விதித்த விவசாய சங்கங்கள்

Published On 2021-11-29 16:58 GMT   |   Update On 2021-11-29 16:58 GMT
குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
புதுடெல்லி:

விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை ஒருபுறம் விவசாயிகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடினாலும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 32 விவசாய சங்கங்கள் சார்பில் சிங்கு எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய விவசாய சங்க தலைவர்கள், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறுதல், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

‘எங்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து புதன்கிழமை ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்’ என்றும் விவசாய சங்க தலைவர்கள் கூறினர்.

Tags:    

Similar News