செய்திகள்
பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி

சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது- ஜனாதிபதி உரை

Published On 2021-01-29 06:06 GMT   |   Update On 2021-01-29 06:06 GMT
சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது என்றும், கடந்த ஆண்டில் பல சவால்களை கடந்து வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கொரோனா காலத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றி உள்ளது. கடினமான இலக்குகளையும் நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது. கொரோனா பரவல், வெட்டுக்கிளி தாக்குதல், பறவைக் காய்ச்சல் என கடந்த ஆண்டில் பல சவால்களை கடந்து வந்துள்ளோம்.

பெரும் தொற்று சமயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்டுத்தி உள்ளது

வேளாண் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் கடந்த ஆண்டில் உயிரிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News