செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி தற்கொலை- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

Published On 2020-09-12 06:04 GMT   |   Update On 2020-09-12 06:04 GMT
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மதுரை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.



எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News