ஆன்மிகம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா

Published On 2020-08-19 10:06 GMT   |   Update On 2020-08-19 10:06 GMT
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதையொட்டி கற்பகவிநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் சூரனை வதம் செய்தார்.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 13-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

6-வது நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதையொட்டி கற்பகவிநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் சூரனை வதம் செய்தார்.

10-வது திருநாளன்று கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் என்ற செந்தில் செட்டியார், காரைக்குடி மெய்யப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News