ஆன்மிகம்
ஆடித்தபசு விழாவில் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-08-03 06:14 GMT   |   Update On 2020-08-03 06:14 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா பக்தர்கள் இன்றி நடந்தது. சில பக்தர்கள் ரத வீதிகளில் நின்றே கோவிலைப் பார்த்து வழிபட்டு சென்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆடித்தபசு விழா முக்கியமானது ஆகும். இந்த விழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி நடைபெறும் நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவிலில் ஆடித்தபசு விழா பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

விழாவின் சிகர நாளான நேற்று ஆடித்தபசு விழா நடந்தது. எனினும் கோவில் தெற்கு ரத வீதியில் ஆடித்தபசு திருவிழா காட்சி நடத்தப்படவில்லை. கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் இன்றி நடந்தது. சில பக்தர்கள் ரத வீதிகளில் நின்றே கோவிலைப் பார்த்து வழிபட்டு சென்றனர்.

கோவிலுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News