செய்திகள்

காஞ்சீபுரத்தில் மதுபானம் பதுக்கி விற்ற ‘பார்’ ஊழியர்கள் 4 பேர் கைது

Published On 2019-05-16 08:06 GMT   |   Update On 2019-05-16 08:06 GMT
காஞ்சீபுரத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளின் பார்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் காஞ்சீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்த காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை சாலியர் தெருமேட்டு தெரு நெல்லுக்காரதெரு பகுதியில் உள்ள பார் ஊழியர்கள் கிருபானந்தன், நாகராஜ், முருகன், பசுபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News