உள்ளூர் செய்திகள்
இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்த காட்சி.

நாகர்கோவிலில் 80 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2022-01-11 09:58 GMT   |   Update On 2022-01-11 09:58 GMT
நாகர்கோவிலில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 80 வீடுகள் அகற்றப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பறக்கின் கால்வாயின் இரு புறமும் ஆக்கிரமிப்பு வீடுகள் கட் டப்பட்டு இருந்தது.


இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வீடுகளில் குடியிருந்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டது.


பறக்கின்கால் பகுதியில் இருந்து ரெயில்வே ரோடு வரை சுமார் 300 வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத் தப்பட்டது. வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு அஞ்சுகிராமம் அருகே பால் குளம் பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் இருந்து குளத்தூர் வரை 147 ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ரெயில்வே ரோடு பகுதிக்கு சென்றனர்.
 
அங்கு ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட் டனர். ஆக்கிரமித்து கட்டப் பட்டு இருந்த வீடுகளில் ஒரு சில பொதுமக்கள் குடியிருந்தனர். அவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் வீடுகளை காலி  செய்ய மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணியை மேற் கொண்டனர். 2 ஜே.சி.பி. எந்திரம் உதவி யுடன் வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. காலை தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மதியம் வரை 80-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டன. 

மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் கான்கிரீட் வீடு களும்  இருந்தன. அவற் றையும் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. ஆக்கிர மிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News