உள்ளூர் செய்திகள்
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பாடு ரூ.10 க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

தருமபுரி பஸ் நிலையத்தில் அம்மா உணவகத்தில் திடீர் விலை உயர்வு சாப்பாடு ரூ.10 க்கு விற்பனை

Published On 2022-04-16 07:33 GMT   |   Update On 2022-04-16 07:33 GMT
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பாடு ரூ.10 க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தருமபுரி, 

தமிழகம் முழுவதும் ஏழைகளின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களில் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஏழைகளின் பசியை போக்கவும், கூலி தொழிலாளர்களின் வசதிக்கேற்பவும் மலிவு விலையில் உணவு வழங்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015ல் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார்.

 அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது ஏழை மக்களுக்காக காலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5 க்கும், தயிர் சாதம் ரூ.2 க்கும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த அம்மா உணவகத்தில் விலை ஏற்றப் பட்டுள்ளது.
 அதாவது மதியம் ஒரு சாம்பார் சாதம் ரூ.10 க்கு வழங்கப் படுகிறது. அதேநேரத்தில் டோக்கன் ரூ.5 க்கு வழங்கப்படுகிறது.
தருமபுரி அம்மா உணவக ஊழியர்கள் ஏழை மக்களிடம் ரூ.10 வாங்கி கொண்டு 5 ரூபாய்க்கான டோக்கனை தருகிறார்கள். இதனால் அம்மா உணவகங்களுக்கு வரு வோரின் எண்ணிக்கை  வெகுவாக குறைந்து வழங்கியுள்ளது.

இது குறித்து அம்மா உணவத்தில் வழக்கமாக சாப்பிடும் சிலர் கூறியதாவது:
 சில நாட்களாகவே சாப்பாட்டுக்கு பத்து ரூபாய் கேட்கிறார்கள். அம்மா உணவகங்களில் தற்போது வழங்கப்படும் டோக்கன்களில் தருமபுரி மாநகராட்சி சீலும், சீரியல் நம்பரும் உள்ளது. உணவின் விலையும் ரூ.5 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டோக்கன்கள் வழங்குவோர் இது பழைய டோக்கன் என்றும், விலைவாசி ஏறிவிட்டதால் பத்து ரூபாய் சாப்பாடு என்றும் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.
முன்னர் சாம்பார், ஊறுகாய் என்றெல்லாம் கூடுதலாக அம்மா உணவகங்களில் கூடுதலாக கிடைத்து வருகிறது. தற்போது அவையெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. 
இதனால், பத்து ரூபாய் கொடுத்தாலும்  குறைந்த அளவே சாப்பாடு வழங்கப்படுவதால் பொதுமக்ககளுக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படுவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, ‘‘ அம்மா உணவகங்களில் வாழை இலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காகும் செலவு, ஜிஎஸ்டி வரி ஆகியவை கருத்தில்கொண்டு விலையை ஏற்றியுள்ளோம். சில்லரை தட்டுப்பாடும் நிலவுவதால் ஒரு சாப்பாட்டில் 5 ரூபாய் ஏற்றியுள்ளோம்.
தற்போது டீயின் விலை ரூ.12 ஆகி விட்டது. எனவே உணவின் விலை குறைந்த பட்சம் ரூ.10 என்பதில் யாருக்கும் பாதிப்பு இருக்காது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News