செய்திகள்
தற்போதைய வானிலை நிலவரம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-11-18 11:28 GMT   |   Update On 2021-11-18 13:22 GMT
16 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக சென்னை,  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, திருண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News