செய்திகள்
வைரஸ்

ஒமிக்ரான் வைரஸால் அச்சம்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு பரிசோதனை

Published On 2021-11-30 07:09 GMT   |   Update On 2021-11-30 08:53 GMT
புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டேஹ்ராடூன்:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது பிறகு ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது.  

இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் இருக்கும் என்பதால், கொரோனாவைவிட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில அரசு கூறுகையில், " தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 6 பேருக்கும், பிற நாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 14 பேரும் டேஹ்ராடூனைச் சேர்ந்தவர்கள்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்" என்று மாநில அரசு கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்.. ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன
Tags:    

Similar News