செய்திகள்
தினேஷ் சர்மா

உத்தரபிரதேச துணை முதல்-மந்திரிக்கு கொரோனா - மனைவிக்கும் தொற்று உறுதி

Published On 2021-04-22 23:10 GMT   |   Update On 2021-04-22 23:10 GMT
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மக்களை புரட்டியெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் மாண்டு போவதும் தினசரி நிகழ்வாக மாறி விட்டது.
லக்னோ:

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மக்களை புரட்டியெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் மாண்டு போவதும் தினசரி நிகழ்வாக மாறி விட்டது.

இந்த கொடூர தொற்றுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு பிரபலங்களும் ஆளாகி வருகின்றனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மாவுக்கு (வயது 57) நேற்று முன்தினம் இரவு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவை சேர்ந்த தினேஷ் சர்மா இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி ஆதித்யநாத், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News