செய்திகள்
எப்பநாடு ஊராட்சியில் அமைக்கப்பட்ட சாலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

Published On 2020-10-30 09:36 GMT   |   Update On 2020-10-30 09:36 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொட்டபெட்டா ஊராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.36.27 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலை, எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கக்குச்சி முதல் இடுஹட்டி வரை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26.40 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல் பணி, எப்பநாடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசங்கர், ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து ஊட்டி எச்.பி.எப். பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News