தொழில்நுட்பம்

ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களுக்கு புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம்

Published On 2018-09-11 06:27 GMT   |   Update On 2018-09-11 06:27 GMT
ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களுக்கென பிரத்யேக ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SnapdragonWear3100



குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அல்ட்ரா-லோ பவர் சிஸ்டம் சார்ந்த வடிவமைப்பு அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அதிக இன்டராக்ஷன்களை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் சிப் சீராக வேலை செய்ய, கூகுள் நிறுவனத்தின் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக குவால்காம் தெரிவித்துள்ளது.

மேலும் ஃபாஸில் குழுமம், லூயிஸ் வியூட்டன் மற்றும் மான்ட்பிளாக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் தனது சிப்கள் வழங்கப்பட இருப்பதை குவால்காம் உறுதி செய்துள்ளது.



குவால்காம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸரில் குவாட்கோர் ஏ7 பிராசஸர்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., அல்ட்ரா-லோ பவர் கோ-பிராசஸர் QCC1110 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோ-பிராசஸர் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கும் வியர் 3100 பிராசஸரில் புதிய டி.எஸ்.பி. ஃபிரேம்வொர்க் சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த தலைமுறை சென்சார் பிராசஸிங் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும். புதிய வியரபிள் பவர் மேனேஜ்மென்ட் சப்-சிஸ்டம் வழங்கபப்ட்டுள்ளதால் குறைந்த மின்சாரம் மற்றும் அதிக இன்டகிரேஷன் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.



ஸ்னாப்டிராகன் வியர் 3100 (MSM8909w / APQ8009w) சிறப்பம்சங்கள்:

- அதிகபட்சம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
- QCC1110 கோ-பிராசஸர் மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மற்றும் பிரத்யேக ஸ்போர்ட் மற்றும் வழக்கமான வாட்ச் மோட்களை சப்போர்ட் செய்கிறது. பிரசாஸருடன் இணைந்தும் தனியாகவும் இயங்கும்.
- அட்ரினோ 304 GPU: OpenGL ES 3.0, அணியக்கூடிய சாதனங்களில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பவர்
- 400 MHz LPDDR3, eMMC 4.5, இது 4×4 மற்றும் 8×8 போன்ற அமைப்புகளில் சப்போர்ட் செய்யும்
- அதிகபட்சம் 640x480 டிஸ்ப்ளேவினை 60fps, கொண்டுள்ளது. அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது, MIPI மற்றும் SPI சப்போர்ட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடெம், அதிகபட்சம் 1 Gbpsடவுன்லோடு வேரம் மற்றும் to 150 Mbps வேகத்தில் அப்லோடு செய்யும் வசதி
- WCN3620 – லோ-பவர் வைபை மற்றும் ப்ளூடூத், அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது 802.11b/g/n (2.4GHz), குவால்காம் லொகேஷன் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0, ப்ளூடூத் 4.1 + ப்ளூடூத் லோ எனெர்ஜி, இன்டகிரேட்டெட் என்.எஃப்.சி. மற்றும் NXP சப்போர்ட்
- குவால்காம் நாய்ஸ் மற்றும் எக்கோ கான்செலேஷன், குவால்காம் வாய்ஸ் சூட், குவால்காம் வாய்ஸ் ஆக்டிவேஷன், குவால்காம் அகௌஸ்டிக் ஆடியோ கோடெக் மற்றும் ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபையர்
- ஜென் 8C சாட்டிலைட்: ஜென் 8C சாட்டிலைட்: ஜி.பி.எஸ்., க்ளோனஸ், பெய்டௌ, கலீலியோ, டெரெஸ்ட்ரியல்: வை-பை, செல்லுலார், PDR3.0

ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் வேலை செய்யும்படி மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2018 நான்காவது காலாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News