செய்திகள்
கோப்புப்படம்

நேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி - ரஷியா வழங்குகிறது

Published On 2021-01-12 19:47 GMT   |   Update On 2021-01-12 19:47 GMT
ரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.
மாஸ்கோ:

ரஷியா ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நமது அண்டை நாடான நேபாளம் ரஷியாவின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.

ரஷிய வெளியுறவுத்துறையின் இரண்டாவது ஆசிய துறை இயக்குனர் ஜாமிர் கபுலோவ் இந்த தகவலை நேர்காணல் ஒன்றில் உறுதிப்படுத்தினார். “நேபாளத்தைப் போல ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகள் ரஷிய தடுப்பூசியை பயன்படுத்த விரும்புவதை நான் கவனிக்கிறேன். நேபாள மருந்து நிறுவனம் எங்களிடம் 25 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கேட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது” என்று அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News